செய்திகள்

இந்தியா அதன் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடையும்: சர்வதேசநிதியம் எதிர்வு கூறல்

இந்தியாவில்  மத்திய அரசின் தற்போதைய பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை   காரணமாக நடப்பு நிதியாண்டில் அதன் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடையும் என்று சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்டி கூறினார். இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்டி நேற்றிரவு புதுடெல்லி சென்றார். அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடிஇ மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசும்போதே இக்கருத்தை தெரிவித்தார்.

புதிதாக இளம் தலைமுறையினருக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு நாட்டின் தொழில் உற்பத்தி அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டில் அதற்கான வழிமுறைகள் பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளதாக இந்திய தரப்பில் தெரிவிக்கின்றனர்.அவர்களது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியது. அவர்கள் அப்பணியை செவ்வனே மேற்கொண்டால்இ நடப்பு நிதியாண்டிலேயே அதன் பொருளாதார வளர்ச்சி இலக்கை நிச்சயம் அடையலாம் என்று உறுதி கூறுவதாக அவர் தொவித்தார்.