செய்திகள்

இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியாவில் ஈர்ப்பலைகள் கூராய்வு மையத்தை நிறுவுவது தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பெல்ஜியம் பயணத்தை முடித்து கொண்டு, அணுசக்தி பாதுகாப்பு குறித்த உச்சி நாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அமெரிக்கா சென்றார். தலைநகர் வாசிங்டனில், நியூசிலாந்து பிரதமர் ஜான் கீயை, மோடி சந்தித்துப் பேசினார்.

இதனைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகையில் அளித்த விருந்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த விருந்து நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, வாசிங்டனில், ஈர்ப்பலைகள் கூராய்வு மையத்தை இந்தியாவில் நிறுவுவது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி, மற்றும் லிகோ விஞ்ஞானிகள் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்திய அணுசக்தித் துறையின் செயலர் சேகர் பாசு, அமெரிக்க தேசிய அறிவியல் அமைப்பைச் சேர்ந்த பிரான்ஸ் கோர்டுவா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வரும் 2023ம் ஆண்டில், இந்த ஆய்வு மையம் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

N5