செய்திகள்

இந்தியா பாக்கிஸ்தான் தொடர் டிசம்பரில்?

இந்தியா பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் டிசம்பரில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப்பின் பாகிஸ்தானுடனான தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தலைவர் ஷாரியார் கான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தலைவர் டால்மியாவை நேற்று சந்தித்தார்.
இதில் இரு அணிகளுக்கும் இடையிலான தொடரை மீண்டும் நடத்துவது குறித்து பேசப்பட்டது. இதன்படி வரும் டிச.ம்பரில்3 டெஸ்ட் 5 ஒரு நாள் 2 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்து பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தலைவர் ஷாரியார் கான் கூறுகையில் இரு அணிகளுக்கு இடையே மீண்டும் போட்டிகள் துவங்கவுள்ளது. ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி வரும் டிச.இல் இத்தொடர் நடக்கும். சார்ஜா துபாய் அபுதாபியில் டெஸ்ட் போட்டிகளை நடத்த யு.ஏ.இ. தயாராகவுள்ளது என்றார்.