செய்திகள்

இந்தியா மற்றும் சீனாவுடனான உறவுகள் பற்றி மைத்திரியிடம் வினவியுள்ள ஜோன் கெரி

சீனா மற்றும் இந்தியாவுடனான இலங்கையின் உறவுகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கேரி வினவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஜோன் கெரியுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் ஜனாதிபதியிடம் இது தொடர்பாக வினவியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது அந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , இலங்கை வெளிநாட்டு கொள்கைகளில் நடு நிலைமையை பேணுவதாகவும் தமது அயல் நாடான இந்தியாவுடன் விசேட நட்புறவு காணப்படுவதாகவும் அத்துடன் சீனாவினால் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகள் நாட்டின் அபிவிருத்திகளுக்கு அத்தியாவசியமானதாக கருதப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கை ஒரு நாட்டுடன் நட்;புறவை பேணும் போது மற்றுமொரு நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே தொடர்புகள் பேணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்பும் வகையிலான அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு சகல நாடுகளின் ஒத்துழைப்புகளும் அவசியமாகுமெனவும் இதன்படி சிறந்த வெளிநாட்டு கொள்கையை பேணுவது அவசியமாகுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.