செய்திகள்

இந்தியா 200 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய அஜிங்கிய ரகானே, உமேஷ் யாதவ் மற்றும் மோகித் ஷர்மா ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக அம்பதி ராயுடு, அக்சர் படேல் மற்றும் தவால் குல்கர்னி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். வங்கதேச அணி தரப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்திய அணியின் தவான், ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த போட்டியில் இந்திய வீரர்கள் அதிக அக்கறையுடன் விளையாட வேண்டும் என்று கூறியிருந்த ரோகித் சர்மா போட்டியின் 2-வத பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.
அடுத்து தவானுடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட்டை இழக்காமல் பார்த்துக்கொள்வதில் குறிக்கோளாக செயல்பட்டது. அதேசமயம் இடையிடையே அடித்தும் விளையாடினார்கள்.

அணியின் ஸ்கோர் 74 ரன்னாக இருக்கும்போது கோலி 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து தோனி களம் இறங்கினார். சிறப்பாக விளையாடிய தவான் 53 ரன்க்ள எடு்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு தோனியுடன் அம்பதி ராயுடன் ஜோடி சேர்ந்தார். இவர் ரன் ஏதும எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின் வந்த ரெய்னா 34 ரன்கள் எடுத்து முஸ்தாபிஜூர் பந்தில் அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 35.3 ஓவரில் 163 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் முஸ்தாபிஜூர் இந்திய விக்கெட்டுகளை அள்ளினார். அவர் பந்தில் அக்சர் படேல் 0, அஸ்வின் 4, தோனி 47 அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் சாய்த்த அவர் இந்த போட்டியிலும் 6விக்கெட்டுகள் வீழ்த்தினார். . இந்திய அணி 45 ஓவரில் 200 ஓட்டங்களை பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது