செய்திகள்

இந்திய அணிக்கு பலம் சேர்த்துள்ள வேகப்பந்துவீச்சாளர்கள்

shami-virat-kohli

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் 2105லககிண்ணப்போட்டிகளில் இந்திய அணிக்கு எவரும் எதிர்பாரத பலத்தை வழங்கியுள்ளதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.உமேஸ் யாதவ்,முகமட் சமி, மோகிட் சர்மா ஆகிய மூவரும் பந்துவீசிய விதம் இன்ப அதிர்ச்சியாகஅமைந்துள்ளது ,இந்திய அணி தொடர்பாக தாங்கள் வகுத்திருந்த வியூகங்களை எதிரணிகள் கைவிடவேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது எனவும் அவர்தெரிவித்துள்ளதுடன், டோனி இதனால் புதுப்பலம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.உலக கிண்ணப் போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்படமாட்டார்கள் என பல கள்எதிர்பார்த்திருந்தன,இதனால் இந்திய அணி பலவீனமானதாக காணப்படும் என்றும் அவர்கள் கருதினர், ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது நடைபெறவில்லை.

இந்திய அணியின் துடுப்பாட்டமே தங்களை சோதிக்கும் என எதிரணிகளுக்கு தெரிந்திருந்தது,அணியின் துடுப்பாட்ட வரிசை அற்புதமானஏழு வீரர்களை கொண்டது.இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சோபிக்கமாட்டார்கள்,இதன் காரணமாக இந்திய அணி சற்று பலவீனமானதாக காணப்படும் என அவர்கள் எதிர்பார்த்தனர்.
எனினும் இதற்கு மாறாக இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடியதும் அணி ஓரு புது பரிணாமத்தை பெற்றுள்ளது.இதன்காரணமாக இந்திய அணிக்கு அதிகளவான ஓட்டங்களை பெறவேண்டிய அவசியமில்லை என்பதும்(310-340)அதனால் அணியின் துடுப்பாட்ட வரிசைக்கு அழுத்தங்கள் எதுவுமில்லை என்பதும் எதிரணிகளுக்கு தெரிந்துள்ளது.மேலும் இரண்டாவதாக துடுப்பபெடுத்தாடிய ஓவ்வொரு வேளையும் இந்தியா அதன் பந்துவீச்சாளர்கள் காரணமாக, அதிகளவான இலக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கவில்லை.
மேலும் இந்தியாவிற்கு எதிராக 300ற்கும் மேற்பட்ட ஓட்டங்களை பெறுவது கடினமான விடயம் என்பதும் அணிகளுக்கு தெரிந்துள்ளது. துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சிற்கு மேலாக அவர்களது களத்தடுப்பும் சிறப்பானதாக காணப்படுகின்றது.
இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் வெற்றி ஓரு எதிர்பாரத சந்தோசமான விடயமாக அமைந்துள்ளது.அவர்கள் அவுஸ்திரேலியாவில் பந்து அதிகளவு ஸ்விங் ஆகாது என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றாற்போல பந்துவீசுகின்றனர்.மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும் அற்புதமாக பந்துவீசியுள்ளனர். மோகிட் சர்மா 20 முதல் 30 ஓவர்களிற்குள் சிறப்பாக பந்துவீசியுள்ளதுடன் இறுதி ஓவர்களையும் பாராட்ட தக்க விதத்தில் வீசியுள்ளார்.
இதேவேளை சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினின் பந்துவீச்சே பலரையும் கவர்ந்துள்ளது.இதுவரை அவர் 11 விக்கெட்களைவ வீழ்த்தியுள்ளார்.கடந்த சில வருடங்களா அவரிடத்தில் காணப்பட்ட தற்பாதுகாப்பு மனோநிலை இப்போது அவரிடமிள்ளாததே அதற்கு காரணம்.
பலர் கடந்த காலங்களை டோனி இந்த தொடரில் வெளிப்படுத்தும் ஆக்ரோசமான தலைமைத்துவமும் இந்தியா சிறப்பாக விளையாடுவதற்கு ஓரு காரணம் என்கின்றனர்.இதற்கு காரணம் அவரிடமுள்ள வழங்களே,பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினால். அவரிற்கு தன்னிடம் வளங்கள் உள்ளன என்பது தெரிந்திருக்கும்,அவரால் ஐந்து பந்துவீச்சாளர்களை அணிக்கு தெரிவுசெய்யமுடிகின்றமையே பெரிய விடயம்,அதற்கு மேல் மிகத்திறமையாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்தக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்களும், சுழற்பந்துவீச்சாளர்களும் உள்ளனர் என டிராவிட் சுட்டிக்காட்டியுள்ளார்.