செய்திகள்

இந்திய அணியின் துடுப்பாட்ட திறனை பரீட்சித்து பார்த்த மேற்கிந்திய அணி

2015 உலகிண்ணப்போட்டிகளில் முதல்தடவையாக மேற்கிந்திய அணி தோல்வி குறித்த அச்சத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தியபோதிலும். வழமைபோல அணிதலைவர் மகேந்திர சிங் டோனி இறுதிவரை களத்தில் நின்று அணியை வெற்றியை நோக்கி இட்டுச்சென்றுள்ளார்.வெற்றி பெறுவதற்கு 183 ஓட்டங்களை பெறவேண்டிய இந்திய அணி 134 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்து அபாயகரமான நிலையிலிருந்தபோதிலும் ஏழாவது விக்கெட்டிற்காகஇணைசேர்ந்த டோனி அஸ்வின் ஜோடி இந்திய அணியை வெற்றியை நோக்கி இட்டுச்சென்றுள்ளது.

பேர்த்தில்  இன்று இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணியின் ஆரம்பவீரர்கள்கெயில் மற்றும் ஸ்மித் துடுப்பெடுத்தாடிய விதம் அணியின் ஏனைய வீரர்கள் மீது கடும் அழுத்தத்தை கொடுத்ததும், அணிக்கு கடும்பாதிப்பை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறிய கெயில் ,ஓட்டங்களை ஓடிப்பெறுவதிலும் சிரமப்பட்டார்.பின்னர் ஓரு தருணத்தில் கண்மூடித்தனமாக அடித்தாட ஆரம்பித்து ஆட்டமிழந்தார்.அவர் முழுiயான உடற்தகுதியுடன் காணப்படாததும் புலப்பட்டது. .இதேவேளை     மறுமுனையில் அடித்து ஆடுவதற்கு சிரமப்பட்ட ஸ்மித் ஓட்டங்களை ஓடிப்பெற முயன்ற வேளை கெயில் முழுமையான ஓத்துழைப்பை வழங்கவில்லை.கெயில் முழுiயான ஓத்துழைப்பை வழங்காததால் சாமுவேல்சும் ரன் அவுட் ஆனார்.இதன் பின்னர் சிறப்பாக பந்து வீசிக்கொண்டிருந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை கண்முடித்தனமாக அடித்து ஆடமுயன்று கெயில் ஆட்டமிழந்தார்

207761

கடந்த போட்டிகளில் ரம்டின், சிம்மன்ஸ்,சமி, ரசல் போன்றவர்கள் அணியை காப்பாற்றியிருந்தனர், எனினும் அந்த போட்டிகளில் அவர்கள் 20 ஓவர்களுக்கு பின்னரே ஆடவந்தனர். இந்த போட்டியில் 10 ஓவரிற்கு பின்னர் ஆடவந்த அவர்களால் நிலைமையை எதிர்கொள்ளமுடியவில்லை. இறுதியில் மேற்கிந்திய அணியின் 23 வயது அணித்தலைவர் ஜேசன் ஹோல்டரின் துடுப்பாட்டம் காரணமாக அணி 182ஓட்டங்களை பெற்றது. எனினும் 44 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணி துடுப்பெடுத்தாடிய வேளை வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர் சிறப்பாக பந்துவீசி தவான்,மற்றும்ரோகித் சர்மாவை வெளியேற்றினார்.கோலி சிறப்பாக விளையாடியபோதிலும் ரசல் அவரை ஆட்டமிழக்கச்செய்தார்.ரகானே,ரெய்னா,ஜடேஜா ஆகியோர் ஆட்டமிழந்தபோது இந்திய அணியை தோல்வி பயம் இந்த தொடரில் முதல்தடவையாக எட்டிப்பார்த்தது. எனினும் டோனி வழைமைபோல அணியின் பாதுகாவலனாக விளங்கினார்.