செய்திகள்

இந்திய அணி வீரர்களுக்கு நான் மூத்த சகோதரன் போன்றவன்: ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக முன்னாள் அதிரடி வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா மோசமாக தோல்வியடைந்ததையொட்டி அவர் இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவர் இயக்குனராக இருந்தபோதுதான் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் அரையிறுதி வரை சென்றது. அவரது பதவிக்காலம் முடிந்த பின்னரும் அவர் அந்த பதவியில் நீட்டிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தெண்டுல்கர், தோனி, விராட் கோலி அதிக அளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தான் இயக்குனராக இருந்தாலும், வீரர்களின் மூத்த சகோதரன் போன்றவன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

இளம் வீரர்களிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன. விளையாட்டு போட்டிகளில் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினேன். ரவி சாஸ்திரி நம்முடைய மூத்த சகோதரர் போல் இருக்கிறார். அதனால் அவரிடம் சென்று எந்த விஷயத்தை பற்றியும் பேசலாம் என்ற ஆறுதல் இப்போது இந்திய அணியில் ஏற்பட்டுள்ளது.
தோனிக்கும் விராட் கோலிக்கும் இடையே விரிசல் என்று கூறுகிறார்கள். ஆனால், அங்கு என்ன நடக்கிறது என்று மக்கள் உணரவில்லை. அவர்கள் இரண்டு பேரும் பரஸ்பரம் மரியாதை வைத்துள்ளனர்.