செய்திகள்

இந்திய இசையை விரும்புகிறேன்: பிராவோ

சென்னையில் நேற்று இரவு திவோ நிறுவனம் சார்பில் ‘சலோ சலோ பாடல் வெளியீட்டு விழா நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் வீரர் பிராவோ இந்த பாடலை பாடி இருக்கிறார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாடலுடன் நடனம் ஆடிய பிராவோ பேசியதாவது:–
ஆடுகளத்தில் எனது பெயர் பிராவோ என்று எல்லோருக்கும் தெரியும். ஆடுகளத்துக்கு வெளியே டி.ஜே. பிராவோ என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன். உலககோப்பை போட்டிக்கான அணியில் இடம் கிடைக்காத போது இசை ஆர்வத்தில் இருந்தேன். இந்திய இசையை நான் மிகவும் விரும்புகிறேன்.ரிங்கா…ரிங்கா.. மற்றும் லுங்கி டான்ஸ் பாடல் எனக்கு பிடித்ததாகும்.
msdhonisakshiziva
சென்னையில் எனக்கு பிடித்த உணவு மட்டன் பிரியாணியாகும். இங்குள்ள தெருக்களில் நடந்து சென்று மாம்பழங்களை வாங்கி சென்று இருக்கிறேன். எனது சொந்த ஊரான டிரினி டாட்டை சென்னை நகரம் நினைவுப்படுத்துகிறது. இரண்டு இடங்களிலுமே இசையை விரும்பும் சாதாரண மக்கள் இருக்கிறார்கள்.உலா என்ற தமிழ் படத்தில் நான் நடித்து இருக்கிறேன். மேலும் படங்களில் நடிக்கும் ஆர்வத்துடன் இருக்கிறேன். இந்தி நடிகர்களில் ஷாருக்கானையும், தீபிகா படுகோனையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.இவ்வாறு பிராவோ கூறினார்.
bravoparty
இந்த நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி தனது மனைவி சாக்ஷி, குழந்தையுடன் பங்கேற்றார். கிறிஸ்கெய்ல், ஜடேஜா, சுமித், ஆசிஷ் நெக்ரா, மைக்ஹஸ்சி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.