செய்திகள்

இந்திய இராணுவ அதிகாரிகள் இலங்கை விஜயம்: இந்தியப் பயிற்சிகள் குறித்தும் ஆராய்வு

இந்திய இராணுவ போர்க் கல்லூரியைச் சேர்ந்த 20 அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

இந்திய இராணுவ போர்க் கல்லூரியின் உயர்கட்டளைப்பீட பணிப்பாளர் பிரிகேடியர் ஜே.எஸ்.சந்து தலைமையிலான இந்தக் குழுவினர், நேற்று இலங்கை இராணுவத் தலைமையகத்தில், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்னாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

இதன்போது, இந்திய இராணுவப் பயிற்சி மையங்களில், இலங்கை இராணுவத்தினருக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து, இலங்கை இராணுவத் தளபதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

வெளிநாடுகளில் பயிற்சி பெறும் இலங்கை இராணுவத்தினரில் 80 வீதத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் தான் பயிற்சி பெறுகின்றனர் என்றும், இந்தியாவில் பயிற்சி பெறாத சுமார் 1000 வரையான அதிகாரிகள் தான் இராணுவத்தில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.