செய்திகள்

இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

கோவா கடல் பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 2 விமானிகளை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவா கடல்பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்த இந்திய கடற்படை விமானம் நேற்று இரவு விழுந்ததுள்ளது. விமானத்தில் 3 பேர் இருந்ததாகவும்,  இவர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு அதிகாரிகளை காணவில்லை என்றும் தெரியவந்துள்ளது. காணாமற்போன கடற்படை அதிகாரிகளின் நிலை என்னவென்று தெரியவரவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவாவிற்கு தென்மேற்காக 25 நாட்டிக்கல் மைல் தொலைவில் விமானம் விழுந்து விபத்துக்குள் சிக்கியது. 6-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் விமானப்படை விமானங்கள் தேடும் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.