செய்திகள்

இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் சச்சின் கங்குலி மற்றும் லஷ்மண் ஆகியோருக்கு இடம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் உருவாக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுவில் கிரிக்கெட் விளையாட்டின் சாதனையாளர்களான சச்சின் கங்குலி மற்றும் லக்ஸ்மன் ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளரான அனுராக் தாகூர் தனது டுவிட்டர் செய்தியில் இது குறித்து தெரிவித்துள்ளார். சச்சின் கங்குலி மற்றும் லஷ்மண் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

மேலும் மற்றொரு டுவிட்டில் இந்த மூன்று சாதனையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகச்சிறப்பு வாய்ந்தது எனவும் அவர்களின் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு மூலம் நீண்ட நாட்களாக நிலவிவந்த வதந்தி முடிவுக்கு வந்துள்ளது. மேலும் கங்குலி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வருவார் என்ற செய்தியும் முடிவுக்கு வந்துள்ளது.