செய்திகள்

இந்திய – சீன உறவு மேம்பட ஆறு அம்சத் திட்டம்: சுஷ்மா

இந்திய – சீன உறவுகள் மேம்பட 6 அம்சத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார். 4 நாள் சுற்றுப் பயணமாக சீனா சென்றுள்ள நிலையிலேயே இதனை அவர் தெரிவித்தார்.

சீனாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய சீன உறவு மேம்பட 6 அம்ச திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். செயல்பாடுடன் கூடிய அணுகுமுறை, வெளிப்படையான பேச்சுவார்த்தை,. பொதுத்தன்மை, மண்டல ரீதியான வளர்ச்சி திட்டங்களில் உடன்பாடு, தகவல் தொடர்பு விரிவாக்கம். ஏசியான் நாடுகளின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத வேண்டும்.

இந்தியா இதற்கான முன்னேற்பாடுகளில் ஏற்கனவே இறங்கி விட்டது.என்று கூறினார். மேலும் இந்தியாவும் சீனாவும் வலுவான நாடுகள் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறினார்.