செய்திகள்

இந்திய துணைத் தூதுவர் வடக்கு விவசாய அமைச்சரின் அலுவலகத்துக்கு விஜயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துக்கு அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆறுமுகம் நடராஜன் இன்று வியாழக்கிழமை வடமாகாண விவசாய அமைச்சரின் அலுவலகத்துக்கு விஜயம் செய்து விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுடன் சம்பிரதாய பூர்வமான சந்திப்பை  மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அமைச்சர் பொ.ஐங்கரநேசனுடன் அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன், வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ.சிவபாதம், வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர் சி.வசீகரன், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் வ.மதுமதி, அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் த.சர்வானந்தா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

இச் சந்திப்பின் போது வடக்கு மாகாணத்தின் விவசாயம், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, நீர்ப்பாசனம் ஆகிய துறைகள் தொடர்பான திட்டங்களுக்குத் தாம் உதவத் தயாராக இருப்பதாக துணைத் தூதுவர் ஆ. நடராஜன் தெரிவித்துள்ளார்.