செய்திகள்

இந்திய பிரதமரின் விஜயம் குறித்துபலத்த எதிர்பார்ப்பு நிலவுவதாக கருத்து

இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கை விஜயம் குறித்து பலத்த எதிர்பார்ப்பு நிலவுவதாக இலங்கை அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த விஜயம் சில காலங்களுக்கு முன்னரே இடம்பெற்றிருக்க வேண்டும் என அவர்கள் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது
மோடியின் இலங்கை விஜயம் குறித்து பலத்த எதிர்பார்ப்பு காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
இந்த விஜயம் குறித்த என்ன எதிர்பார்க்கிறீர்கள் என கேள்வியெழுப்பியதற்கு அது குறித்து நேரடியாக பதிலளிக்க மறுத்துள்ள அவர் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம் சிறப்பாக அமைந்தது,நாங்கள் தற்போது இந்திய விஜயம் குறித்து எதிர்பார்த்திருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசியல் நல்லிணக்கம் என்பது தமிழ் அரசியல்வாதிகளுக்கு முக்கிய விடயமாக அமைந்துள்ளது இந்த விடயத்தை பாகுபாடின்றி முன்னெடுப்பதாக இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு உறுதியளித்துள்ளது.
இதேவேளை முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா இந்திய பிரதமரின் விஜயம்,சில காலத்திற்கு முன்னதாக இடம்பெற்றிருக்கவேண்டும் என குறிப்பிட்டார்.இலங்கைக்கான இந்திய உதவிக்கு நன்றி தெரிவித்த அவர் இரு நாடுகளும் தமது அணிசேரா கொள்கையை பின்பற்றவேண்டும் என்றாh.
28 வருடங்கள் இந்திய பிரதமர் ஓருவர் இலங்கைக்கு விஜயம்செய்யவில்லை.இது மிகப்பெரிய கால இடைவெளிமுன்னரே இந்த விஜயம் இடம்பெற்றிருக்கவேண்டும்,தற்போது இடம்பெறுவது குறித்து மகிழ்ச்சியடைகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இந்திய இலங்கை உறவுகள் சில பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தன,விதிமுறைகளை மீறி சீனா அரசாங்கத்துடன் பல உடன்படிக்கைகள் கைச்சாத்தாகின,இவை இலங்கைக்கு நன்மையளிப்பவையா என பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என்றும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் இந்தியாவால் இராணுவரீதியில் உதவமுடியவில்லை என்பது குறித்து ஏமாற்றம் கொண்டுள்ளீர்களா என்ற கேள்விக்கு அப்படியில்லை பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா எங்களுக்கு தார்மீக மற்றும் உளவியல் ரீதியிலான உதவிகளை தந்தது,இது எங்களுக்கு தாராளமாக போதும்,தமிழ்நாட்டில் காணப்பட்ட உணர்வலைகள் குறித்து இந்தியா எதிர்கொண்;ட நெருக்கடிகள் குறித்து எங்களுக்கு தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை இந்திய உறவுகள் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை இந்த விஜயம் சரிசெய்யும் என குறிப்பிட்டுள்ள இலங்கை அதிகாரி ஓருவர்,சர்வதேச அளவில் பணியாற்றும்போது மேலும்நெருக்கமான ஓருங்கிணைப்பு அவசியம் என குறிப்பிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.