செய்திகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளை மறந்து போனார் – வேலுசாமி இராதாகிருஸ்ணன் கவலை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளை மறந்து பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை மலையக மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் மிகவும் மனவருத்தம் அடைகின்றேன்.இது எங்களை அவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்து நாடாளுமன்றத்தில் இன்று (13.03.2015) ஆற்றிய உரை  தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பாக நாம் பல எதிர்பார்ப்புகளுடன் பாராளுமன்றத்திற்கு அவருடைய உரையை கேட்பதற்கு சென்றிருந்தோம் ஆனால் எமது சமூகத்தைப்பற்றியோ அல்லது எமது வரலாற்றை பற்றியோ  எந்தவிதமான கருத்தையும் வெளியிடாமையானது நான் அந்த சமூகத்தை சார்ந்தவன் என்ற வகையில் எனது மனவேதனையை தெரிவிக்கவிரும்புகின்ற அதேவேளை அவரை நேரில் சந்திக்கின்ற பொழுது இது தொடர்பாக அவருடைய கவனத்திற்கும் கொண்டுவரவுள்ளேன் எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.