செய்திகள்

இந்திய மீனவர்கள் இருவர் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 2 இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவப் படகிலிருந்து 6 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி கூறினார்.

பருத்தித்துறை கடற்பரப்பில் குறித்த மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்

அத்துடன் இந்திய மீனவர்கள் இருவரும் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடும் போர்வையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தற்போது கடற்படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீன் பிடிப்படகையும் கைப்பற்றியுள்ளதாக அவர் கூறினார்.

n10