செய்திகள்

இந்திய மீனவர்கள் ஐவர் கைது

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்படி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 5 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கச்சத்தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் குறித்த ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்துள்ளனர். இவர்கள் தலைமன்னார் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் 14 பேர் ஏற்கவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுபடி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.