செய்திகள்

இந்திய விமானப்படையின் 25 விமானங்கள் இலங்கைக்கு வந்தன

இலங்கை விமானப் படையின் 70ஆவது ஆண்டு நிறைவு நாளை செவ்வாய்க்கிழமை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பதிரனவின் தலைமையில் நடைபெறவுள்ளது.அத்துடன், மார்ச் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை காலி முகத்திடலில் விமானக் கண்காட்சியொன்றும் நடைபெறவுள்ளது.இந்த நிலையில், இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்திய விமானப்படையின் 25 விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளன.(15)