செய்திகள்

இந்திய வீட்டுத்திட்டத்தில் ரிசாட்டின் தலையீட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை: சிவசக்தி ஆனந்தன்

இந்திய வீட்டுத்திட்டத்தில் ரிசாட்டின் தலையீட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டினார்.

இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பாக அவர் நேற்று இடம்பெற்ற கவனயீhப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
இந்திய அரசினால் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என வழங்கப்படவந்த ஐம்பதனாயிரம் ரூபா வீடு திட்டமிடப்பட்ட விதத்தில் உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படாமல் அரசியல் செல்வாக்கோடு கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் முழுமையாக வட மாகணத்தில் வழங்கினால் யுத்தத்தில் இறந்தவாகளின் தொகை தெரிய வரும் என்ற காரணத்தினால் ஐம்பதனாயிரம் வீடுகளையுமு; சிறு சிறு தொகைகளாக பிரித்து இலங்கை முழுவதும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட விடயங்கள் வெளியே வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இவ்வாறு நடந்துள்ளது. ஆகவெ இது மிக மோமான செயல். இந்தியா யாருக்காக இந்த வீட்டை வழங்கினார்களோ இந்த மக்களை இந்த வீடுகள் சென்றடையவில்லை.

ஆகவே இந்திய பிரதமர் இந்த வீட்டுத்திட்டங்களுக்கு என்ன நடந்தது. வீட்டுத்திட்டம் எங்கே எங்கே யாருக்கு வழங்கப்பட்டது என்ற விடயத்தை அறியும் வகையில் இந்த மக்களின் சார்பில் அவரது கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டிய தேவையுள்ளது.

நெடுங்கேணி பிரதேசத்தை எடுத்தால் அது முற்று முழுதாக போரினால் அழிந்த பிரதேசம் ஆனால் அங்கு வழங்கப்பட்ட வீடுகள் வெறுமனமே 424, வவுனியா பிரதேச செயலகத்தில் 10000இற்கும் மேற்பட்டவர்கள் வீட்டுத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் ஆனால் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட வீடு 1620 வீடுகளே. செட்டிகுளத்தில் தமிழர்களுக்கு 390 வீடுகளே வழங்கப்பட்டுள்ளது. ஆங்கு முஸ்லீம்களுக்கு 1070 வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆவே பயனாளிகள் தெரிவில் ரிசாட் பதியுர்தீனின் தலையீடும் வேறு சில அதிகாரிகளின் தலையீடு காரணமாக உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் சென்றடையவில்லை.

ஆகவே கடந்த 6 வருடங்களாக அடிப்படை வசதிகள் இன்றி வாழும் பாதிக்கப்பட்ட மக்கள் புதிய அரசுக்குஆதரவை வழங்கியுள்ள நிலையில் அரசு 100 நாள் வேலைத்திட்டத்தில் காணிகைள மீள் ஒப்படைத்தல், அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட மனிதாபிமான தேவைகளை உள்ளடக்கவில்லை என தெரிவித்தார்.