செய்திகள்

இந்திய வீட்டுத் திட்டம் நிகரற்ற ஒள்று: கீரிமலையில் மோடி

இந்திய வீட்டுத் திட்டமானது வெறுமனே செங்கற்களினாலும், சீமெந்தினாலும் கட்டப்பட்ட வீடுகள் அல்ல. யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் சீரமைத்துக் கொடுக்கும் வீடுகள் எனத் தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திரமோடி எனது இருநாள் நிகழ்வில்  எனக்கு கண்ணீரை வரவழைத்த நிகழ்வு எனக் கூறினார்.

நேற்று யாழ்ப்பாணத்தின் இளவாலை பகுதியில் அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்தினை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசும்போது;

குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த போதும்,  இலங்கையில் சுனாமி ஏற்பட்டபோதும், இன்று நாம் அமைத்துள்ள வீட்டுத்திட்டம் போலவே அன்றும் அமைத்தோம். எனவே இந்த வீட்டுத்திட்டம் நிகரில்லாத ஒன்று. இன்று அது  முழுமையாக்கப்பட்டுள்ளது.

27 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படும் இந்த திட்டத்தில்  57 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 50 ஆயிரம் சிறுவர்களின் வாழ்க்கையை மீண்டும் சீரான நிலைக்கு இட்டுச் செல்லும் இந்த வீடுகள் வெறுமனே செங்கற்களினாலும், சீமெந்தினாலும் கட்டப்பட்ட வீடுகள் அல்ல. யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் சீரமைத்துக் கொடுக்கக்கூடிய வகையில் இந்த வீட்டுத்திட்டம் அமைந்துள்ளது.

நான் இந்த வீட்டுத்திட்டம் வழங்கும் நிகழ்வில்  கலந்து கொண்டபோது சிறுவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். சொந்த வீட்டில் குடியேறப் போகிறோம் என்ற சந்தோஷமே அது. ஒரு பிள்ளை நம்பிக்கையுடன் ஆசிரியராக வருவேன் என்று கூறியது.

இந்த வீட்டில் வாழும் அனைவரும் சிறந்த எதிர்காலத்துடன் கனவுகளை நிறைவேற்றி இந்நாட்டின் அபிவிருத்திக்கு உதவுவீர்கள் என மிகுந்த நம்பிக்கையுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

45  வீடுகளை அமைக்கும் இந்த திட்டத்தில் இன்னும் 20 ஆயிரம் வீடுகளை உடனடியாக கட்டித்தருவோம். மத்திய, ஊவா மாகாணங்களுக்கென 4 ஆயிரம் வீடுகள் கட்டித்தரவுள்ளோம்.

நான் மீண்டும் உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். யாழ்ப்பாண  மக்களின் வாழ்க்கை பாதுகாப்பானதாகவும், சுகம் நிறைந்ததாகவும் அமைவதுடன் இந்த நாட்டின் அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்லவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இரண்டு நாள் பயணத்தில் எனது இறுதி நாளாக இருக்கிறதோடு எனக்கு கண்ணீரை வரவழைக்கும் நிகழ்வாகவும் இருந்தது. அத்துடன் நான் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியுடன் தொடர்ந்திருப்பேன். மீண்டும் மீண்டும் உங்களுக்கு வாழ்த்துகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

bahirathi

3