செய்திகள்

இந்திய வெளிவிவகாரச் செயலாளராக ஜயசங்கர் நியமிக்கப்பட்டமைக்கு சம்பந்தன் வரவேற்பு

இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளராக ஜயசங்கர் நியமிக்கப்பட்டமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரா இரா.சம்பந்தன் வரவேற்றிருக்கின்றார்.

1988 -1990 காலப்பகுதியில் மாகாண சபை அமைக்கப்பட்டபோது, ஜயசங்கர் இலங்கையில் பணியாற்றியவர் என்பதால், அவரது நியமனம் பயனுள்ளதாக அமையும் என தான் எதிர்பார்ப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

அந்தக்காலப் பகுதியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக்காண்பதற்காக இந்தியா முன்னெடுத்த முயற்சிகளுக்கு ஜயசங்கர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர் எனவும் சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.