செய்திகள்

இந்தோனேஷியாவின் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 45 பேர் பலி

இந்தோனேஷியா ராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சுமத்ரா தீவு அருகே விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகி உள்ளனர்.
மேடனில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் குடியிருப்புகள் கடுமையாக சேதம் அடைந்தன. கார்கள் தீப்பிடித்து எரிந்தன.

இந்த விபத்து பற்றி மீட்புப்படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும் போது “ஹெர்குலஸ் சி 130 என்ற விமானம் சுமத்ரா அருகே உள்ள மேடன் நகர குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் இதுவரை 45 பேர் பலியாகிவிட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்” என தெரிவித்துள்ளார். மேலும் விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்று சரியான தகவல் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.