செய்திகள்

இந்தோனேஷியாவில் 85 இலங்கையர்கள் கைது! அவுஸ்திரேலியா செல்ல வந்ததாக சந்தேகம்

விசா இல்லாமல் தங்கியிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இலங்கையர்கள் 85 பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தோனேஷிய பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை ஒன்றின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டு குடிவரவு தடுப்பு முகாமுக்கு அனுபிவைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அவுஸ்திரேலியாவில் அரசியல் அடைக்கலம் கோருவதற்காக இந்தோனேஷியாவில் வந்து தங்கியிருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.