செய்திகள்

இந்த தேர்தலில் அரசியல் குறித்து கருத்து தெரிவிக்க மாட்டேன்: ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று பத்மவிபூஷன் விருது வழங்கப்படுகிறது. இதற்காக நேற்றிரவு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்ற ரஜினிகாந்த் இந்த தேர்தலில் அரசியல் குறித்து தாம் எதுவும் பேசப் போவதில்லை எனத் தெரிவித்தார்.

நடிகர் ரஜினி உள்ளிட்ட பிரபலங்களுக்கு  கடந்த ஜனவரி மாதம் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அவர்களில் ஒரு பகுதியினருக்கு ஏற்கனவே நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பத்மவிபூஷன் விருதை குடியரசுத் தலைவர் வழங்குகிறார்.

இதற்காக நேற்று சென்னையிலிருந்து டெல்லி சென்ற ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த தேர்தலில் அரசியல் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என்றார்.

N5