செய்திகள்

இந்த முறை இந்தியாவால் வெல்ல முடியுமா? அணி விராட்கோலியை பெரிதும் நம்பியுள்ளது – ராகுல் டிராவிட்

2015 உலககிண்ணத்தை வெல்வதற்கு அணிதுடுப்பாட்டத்தில் விராட்கோலியை பெரிதும் நம்பியுள்ளது என ராகுல்டிராவிட் தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
இந்திய அணி டெஸ்ட்போட்டிகளில் வீழ்ச்சிநிலையை சந்தித்து வரும் அதேவேளை ஒரு நாள்போட்டிகளில் அதன்திறமை அதிகரித்துள்ளது, அதன் காரணமாகவே அணி ஒரு நாள்போட்டிகளிற்கான தரப்படுத்தலில் இரண்டாவது இடத்திலுள்ளது, அணி போதுமான அனுபவத்தை கொண்டுள்ளது என நான் கருதுகிறேன், கடைசி 5 ஓவர்களை வீசுதல் முகமட் சமியிடம் சிறப்பான யோர்க்கர்கள் உள்ளன,அவர் நல்லநிலையிருந்தால் சிறப்பாகவிளையாடுவார்,இஷாந் சர்மா ஓரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார்.

பந்து ஸ்விங் ஆகும்போது புவனேஸ்குமார் அற்புதமாக பந்துவீசுவார்,எனினும் இவர் இறுதி ஓவர்களை சிறப்பாக வீசுகிறார் இல்லை,உமேஸ் யாதவும் அப்படித்தான் ஆகவே இந்த விடயத்தில் அவர்கள் தொடர்ச்சியாக இல்லை, பாக்கிஸ்தானுடன் முதலாவது போட்டி இரு அணிகளுக்கும் எதிர்பார்ப்பு காரணமாக அழுத்தங்கள் காணப்படும்,எனினும் இந்திய அணிக்கு ஆதரவளிப்பவர்களின் எண்ணிக்கை காரணமாக இந்திய அணிக்கு இது பழக்கமானவிடயமாகிவிட்டது.

அணித்தலைவர் என்ற வகையில் டோனி அவருக்கு நீண்ட கால நோக்கங்கள் எதுவுமில்லாததால் ஓரு நாள்போட்டிகள் பொருத்தமாகவுள்ளன. இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் போது கோலியின் பங்களிப்பு-அவர் சிறப்பாக துடுப்பெடுத்தாடவேண்டும், ஏனைய வீரர்களுக்கான அடித்தளத்தையிடவேண்டும்,10 முதல் 35 வரையான ஓவர்களில் அணியை பாதுகாப்பான நிலைக்கு இட்டுச்செல்வதற்கு அவர்கள் அவரையே நம்பியுள்ளனர்.