செய்திகள்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7 ஆயிரத்து 647 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7 ஆயிரத்து 647 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.குறிப்பாக இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில், கொழும்பு மாவட்டத்தில் 218 டெங்கு நோயாளர்களும், புத்தளத்தில் 172 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 130 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் 6 ஆயிரத்து 497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 150 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.(15)