செய்திகள்

இனங்களுக்கிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களை தடைசெய்ய தண்டனை சட்டத்தில் திருத்தம்

இனங்களுக்கிடையே வெறுப்புணர்வு மற்றும் முரண்பாடுகளை ஏற்படுத்தம் வகையில் கருத்துக்கள் வெளியிடுவதை தடை செய்யவும் மற்றும் அவ்வாறான கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு தண்டனை வழங்கும் வகையிலும் தண்டனை சட்டக்கோவையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்தள்ளது.

இது தொடர்பாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் அமைச்சரவையில்  முன்வைக்கப்பட்டிருந்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதன்படி குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அதைனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் மற்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இனங்களுக்கிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதனை தவிர்கும் வகையில் சட்டங்களை அமைக்க வேண்டுமென கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் சிபாரிசை அடிப்படையாக கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.