செய்திகள்

இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு

சேர்பியாவும், குரோசியாவும் பரஸ்பரம் ஓருவர் மீத மற்றவர் முன்வைத்த இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
யுகொஸ்லேவியாவிலிருந்து பிரிவதற்காக 1991 இல்இடம்பெற்ற குரோசிய யுத்தத்தின் போதே இந்த இனப்படுகொலைகள்இடம்பெற்றதாக இரு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
1991 இல் வுகோவர் நகரிலும் ஏனைய பகுதிகளிலும் சேர்பிய படையினர் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக குரோசியா குற்றம்சாட்டியிருந்தது.
அதற்கு பதிலளித்த சேர்பியா குரோசியாவிலிருந்து 200000 சேர்பியர்கள் வெளியேற்றப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தது. எனினும் இது குறித்து இன்று கருத்துவெளியிட்டுள்ள நீதிபதி பீட்டர் டொம்கா இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.
யுத்தத்தின் போது இரு தரப்புபடையினரும் வன்முறைகளில் ஈடுபட்டனர் எனினும் இவை இனப்படுகொலையை நோக்கமாக கொண்டு அமைந்திருந்தன என்பதற்கான ஆதாரங்களை இருதரப்பினரும் முன்வைக்க தவறிவிட்டதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
1991 முதல் 95 வரை இடம்பெற்ற மோதல்களில் 20.000 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது, இவர்களில் அனேகமானவர்கள் குரோசியர்கள்.