செய்திகள்

இனவாதக் கருத்துக்களை வெளியிட்டால் 2 வருட சிறைத்தண்டனை

இன, மதவாதக் கருத்துக்களைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிடுவோருக்கு தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டக்கோவையில் திருத்தத்தைக் கொண்டு வர அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் இது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெளிவுபடுத்தினார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவில் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு அமைவாக, இனவாதம் மற்றும் மதவாதம் போன்றவற்றைத் தோற்றுவிக்கும் வகையிலான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டால் அது தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் குற்றமாகக் கருதப்படும்.

அத்தவறை செய்பவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்