செய்திகள்

இனி வரும் ஜனாதிபதிகளிடம் அமைச்சுகள் ஒப்படைக்கப்படக் கூடாது: பிரதியமைச்சர் ஹெரான் விக்கிரமரட்ன –

இனி வரும் காலங்களில் ஜனாதிபதிகள் வசம் எந்தவொரு அமைச்சுகளும் இருப்பதற்கு இடமளிக்கக் கூடாது என பெருந்தெருக்கள் அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஊக்குவிப்பு பிரதியமைச்சர் ஹெரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி தொடர்பான அமைச்சினை தன் வசம் வைத்திருந்ததாகவும் இதன் போது கேள்வி மனுக் கோரல்கள் இன்றி பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதால் அதில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த மோசடிகளுக்கு மகிந்தவே பொறுப்பு கூற வெண்டுமெனவும் தெரிவித்துள்ள ஹெரான் விக்ரம ரட்ன இது பொன்று மோசடிகளை தவிர்க வேண்டுமென்றால் இனி வரும் காலத்தில் ஜனாதிபதிகளுக்கு எந்த வொரு அமைச்சு பதவியும் ஒப்படைக்கப்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.