செய்திகள்

இன்டர்நெட் சென்டரில் குழந்தை பெற்று விட்டு தொடர்ந்தும் வீடியோ கேம் விளையாடிய பெண்

இன்டர்நெட் சென்டரில் குழந்தையை பிரசவித்துவிட்டு, மீண்டும் வீடியோகேம் விளையாடி உள்ளார் ஒரு சீனப்பெண். இது, அங்கு பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இன்டர்நெட் சென்டரில் பிரசவித்த சீனப்பெண் குறித்து மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அது, அங்குள்ள பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் ஷடோங் மாகாணத்தைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண் ஒருவர், தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சியான்சி மாகாணத்தின் தலைநகரான நன்சாங் நகரில் உள்ள இன்டர்நெட் சென்டருக்கு வந்துள்ளார்.

அங்கு பொழுதை போக்குவதற்காக அவர், கம்ப்யூட்டரில் வீடியோகேம் விளையாடி உள்ளார். அப்போது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு அவர் சத்தம் போட்டுள்ளார். அதன்பின் மெதுவாக எழுந்து அங்குள்ள கழிவறைக்குச் சென்று சிரமப்பட்டு தனது குழந்தையை பிரசவித்து உள்ளார்.

மேலும், அங்கிருந்தவர்களின் உதவியுடன் தண்ணீரைக் கொண்டு தன்னையும், தன் குழந்தையையும் சுத்தம் செய்திருக்கிறார். பின்னர் பிறந்த குழந்தையை இன்டர்நெட் சென்டரில் ஓரமாக வைத்துவிட்டு, மறுபடியும் வீடியோகேம் விளையாடச் சென்றுள்ளார் அந்த பெண்.

இதை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்து மருத்துவமனைக்கு செல்ல வலியுறுத்தி ஸ்ட்ரச்சரில் ஏற்ற முயற்ச்சித்து உள்ளனர். ஆனால் அந்த பெண், ஸ்ட்ரச்சரில் ஏறாமல் நடந்தே சென்று அந்தப் பெண் ஆம்புலன்சில் ஏறி மருத்துவமனைக்கு தன் குழந்தையுடன் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த செய்தி அந்நாட்டு மக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.