செய்திகள்

இன்டர்போல் பொலிஸ் இலங்கை வர அமைச்சரவை விசேட அனுமதி

பல்வேறு குற்றச்சாட்டுக்களை விசாரித்துவரும் சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல் இலங்கை வர விசேட அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இந்த அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தத்தை அமைச்சர் ஜோன் அமரதுங்க மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.

உலகநாடுகள் பலவற்றுக்கு சென்று குற்றவாளிகள் தொடர்பாக புலனாய்வு செய்யும் இன்டர்போல் பொலிஸ் இலங்கை வருவதில் விசா பிரச்சினை தொடர்ந்து இருந்துவந்தது.

பலதடைவைகள் இலங்கை அரசுக்கு இது தொடர்பில் உறுப்பு நாடுகள் கூறியும் இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை.

இந்நிலையில் அரசாங்கம் இன்டர்போல் பொலிசுக்கு எந்நேரமும் இலங்கை வரலாம். விட விசா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை இன்டர்போல் அமைப்பின் உறுப்பு நாடுகளான சிங்கப்பூர், மாலைதீவு,பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.