செய்திகள்

நானே வெல்வேன்: மஹிந்த; 48 மணி நேரத்தில் புதிய ஆட்சி: மைத்திரி

இன்னமும் 48 மணித்தியாலங்களில் இலங்கையில் புதியதொரு அரசாங்கத்தை காண்பீர்கள் என்று பொது அணிகளின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று தனது பிரசார கூட்டங்களை முடித்து வைத்து கொழும்பு மருதானையில் இன்று நடத்திய மாபெரும் பிரசார நிகழ்வில் தெரிவித்தார்.

தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தை கூட்டிய பின்னர் இடைக்கால வரவுசெலவு திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப் படும் என்றும் உறுதியளித்தார்.

இதேவளை, தனது இறுதி பிரசார கூட்டத்தை கெஸ்பாவவில் நடத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பெரும்பான்மை வாக்குகளினால் தான் மீண்டும் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை வெளியிட்டார். தனது மூன்றாவது ஜனாதிபதி காலத்தை இன்னமும் பிறக்காத இலங்கை குழந்தைகளுக்கான அழகிய செழிப்பான சுபீட்சமான இலங்கை உருவாக்குவதற்கு அர்ப்பணிக்கப் போவதாகவும் கூறினார்.