செய்திகள்

இன்னும் டெஸ்ட் போட்டிகள் விளையாட விரும்புகிறேன்: சந்தர்போல்

மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான சந்தர்போல்டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து கழற்றி விடப்பட்டார். சந்தர்போல்இன்னும் 87 ரன்கள் எடுத்தால் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாராவின் ஓட்டங்களை முந்தி விடுவார் என்பதால் நீக்கப்பட்டார் என்று கூறப்பட்டது. இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அவர் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தான் இன்னும் டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்புவதாக; சந்தர்போல்குறிப்பிட்டுள்ளார். 40 வயதான இவர் இதுகுறித்து மேலும் கூறுகையில் ‘‘நான் தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்புகிறேன். 2015-ம் ஆண்டு முடியும் வரை ஓய்வு பெறுவதை விரும்பவில்லை. அதேசமயம் லாராவின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதைப் பற்றி நினைக்கவில்லை’’ என்றார்.

சந்தர்போல்இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளில் 92 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார். கடந்த 10 இன்னிங்சில் ஒரு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளhர்.