செய்திகள்

இன்னும் 15 , 20 வருடங்களுக்கு மைத்திரி , மஹிந்த ஆட்சியே இருக்கும்: லக்‌ஷ்மன் கிரியெல்ல

இன்னும் 15 ,20 வருடங்களுக்கு மைத்திரி ,ரணில் ஆட்சியே நாட்டில் இருக்குமென ஐ.தே.க அமைச்சர் லகஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவே வெற்றி பெறுவார் என அவர் தரப்பினர் நம்பியிருந்தனர். அதற்காக சகல வளங்களையும் பயன்படுத்தினர். இறுதியில் தோல்வியையே கண்டனர். அத்தனை வளங்களை பயன்படுத்தி தோல்வி கண்டவர்கள் இனியும் வெற்றி பெற முடியாது. இன்னும் 15 , 20 வருடங்களுக்கு மைத்திரி ரணில் ஆட்சியே இருக்கும். என அவர் தெரிவித்துள்ளார்.