செய்திகள்

இன்று அடையாளம் காணப்பட்ட 15 பேரும் கொழும்பை சேர்ந்தவர்கள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்ட 15 பேரும் கொழும்பு கெசல்வத்தை , பண்டாரநாயக்க மாவத்தை பகுதியை சேர்ந்தவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் இந்த பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் அந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் மூலம் இன்றைய தினத்தில் 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ள.
இந்த பிரதேசத்திலும் அதனை அண்மித்த பகுதியிலும் இது வரையில் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)