செய்திகள்

இன்று ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை அமர்வு

இன்று நடைபெறவிருந்த கிழக்கு மாகாண சபை அமர்வு நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று (12) திருகோணமலையில் ஏற்பட்ட மின்சார தடை காரணமாகவே இந்த சபை அமர்வு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலெப்பத்தி அறிவித்தார்.