செய்திகள்

இன்று ஒளிபரப்பாகவிருந்த ஜனாதிபதியின் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை!

இன்று ஒளிபரப்பாகவிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ‘ஜனபதி ஜனஹமுவ’ எனும் நிகழ்ச்சியை ஒளிபரப்ப 4 தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு, கடுவலை நீதவான்  நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ளது.

குறித்த நிகழ்ச்சிக்கு இடைக்கால தடைவிதிக்குமாறு, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வழக்கறிஞர், கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றினை சமர்ப்பித்திருந்தார்.

ஜனாதிபதியுடனான மக்கள் சந்திப்பு என்ற இந்த நிகழ்ச்சி தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தப்படும் என்பதாலேயே இதனைத் தடை செய்யுமாறு நீதிமன்றத்தை அவர் கோரியிருந்தார்.

குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி கண்டியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இன்றிரவு ஒரே வேளையில் நான்கு தொலைக்காட்சி சேவைகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.