செய்திகள்

இன்று கொரிய மொழிப் பரீட்சைகள் ஆரம்பம்

இன்றும் நாளையும் கொரிய மொழிப் பரீட்சைகள் கொழும்பில் இடம்பெறவுள்ளன.

நான்கு மத்திய நிலையங்களில் குறித்த பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை 10.30க்கு ஆரம்பமாகவுள்ள இந்தப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் அனுமதிப்பத்திரத்துடன் தெரிவு செய்யப்பட்ட மத்திய நிலையங்களுக்கு வருகை தருமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறியுள்ளது.