செய்திகள்

இன்று பாராளுமன்றம் கலைக்கப்படுமா?

20வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிய பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த போதும் அந்த திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியாமையினால்  இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என தகவல்கள்  வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற 20வது திருத்தம் தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்றைய தினமும் தொடரவுள்ள நிலையில் அந்த விவாதத்தின் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படுமென செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சி பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போது குறித்த தினத்தில்  பாராளுமன்றம் கலைக்கப்படுமென பிரதமர் தெரிவித்ததாக சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்துனர்.
அத்துடன் 20வது திருத்தம் நிறைவேறாத விடயம் இதனால் பாராளுமன்றத்தை உடனடியாக கலைக்க வேண்டமென ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளதாதக  அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பாக இது வரை உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.