செய்திகள்

இன்று பிற்பகல் 2.31க்கு சந்திர கிரகணம் நிகழும்

இவ்வருடத்தில் இடம்பெறக்கூடிய இரண்டு சந்திர கிரணங்களில் முதலாவது கிரகணம் இன்று 04 ஆம் திகதி இடம்பெறும்.

கொழும்பு பல்கலைக்கழக பெளதீக விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்காசியாவுக்கு பூரண சந்திர கிரகணமாக காட்சிதரும் இந்தக் கிரணத்தின் இறுதிப் பகுதி, கிழக்கில் சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து மாலை 7.15 மணி வரை இலங்கைக்கு அரைச்சந்திர கிரகணமாகக் காட்சி தரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கிரகணத்தின் ஆரம்பம் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நேரத்தில் மாலை 2.31 மணிக்கு நிகழும்.

எமக்கு பகல் காலத்தில் கிரகணத்தின் பெரும் பகுதி நிகழ்வதால் இது கிரகணத்தின் இறுதிக்கு அண்மையில் அரை சந்திர கிரகணமாக இலங்கைக்குத் தென்படும்.

கிரகணம் இரவு 8.29 மணிக்கு முடிவுறும்.