செய்திகள்

இன்று முதல் தினமும் 3 மணி நேரம் மின் வெட்டு அமுல்

நாட்டில் பிரதேசங்கள் பலவற்றில் இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை தினமும் மூன்று மணிநேர மின் வெட்டை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி பகல் நேரத்தில்  2 மணித்தியாலங்களும் இரவில் ஒரு மணித்தியாலமும் நான்கு பிரிவுகளின் கீழ்  மின் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது.
மின் வெட்டு இடம்பெறும் பிரதேசங்கள் மற்றும் நேரங்கள் தொடர்பான விபரங்களை http://www.ceb.lk/index.php?aam_media=9773 என்ற இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும்.

 n10

index-1