செய்திகள்

இன்று முதல் தேநீர், விலை குறைகிறது!

பால் தேநீர் 25 ரூபாவுக்கும், சாதாரண தேநீர் மற்றும் அப்பம் ஒன்று தலா 10 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என, நுகர்வோர் அதிகாரசபை, உணவக உரிமையாளர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கையை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதன்படி இன்று முதல் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்குமாறும் அனைத்து வியாபாரிகளிடமும் கோருவதாக நுகர்வோர் அதிகார சபை கூறியுள்ளது.