செய்திகள்

இன்று முதல் மின் வெட்டு இருக்காது : மின்சார அமைச்சர் உறுதி

 இன்று முதல் மின் வெட்டு இடம்பெறாது எனவும் மக்களுக்கு தொடர்ச்சியாக மின் விநியோகம் இடம்பெறுமெனவும் மின்சார அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவித்துள்ளார்.
தற்போது நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயற்பட ஆரம்பித்துள்ளதாகவும் இதனால் மின் தடை ஏற்பட வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை  கடந்த சில நாட்களாக இடம்பெற்ற மின் வெட்டு தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
n10