செய்திகள்

இன்று முதல் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

இன்று 18ம் திகதி முதல் சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவிக்கிறது.

இரண்டாம் தவணைக்காக சகல முஸ்லிம் பாடசாலைகளும் இன்று 18 ம் திகதி விடுமுறை வழங்கப்படுவதுடன் மூன்றாம் தவணைக்காக ஜூலை 21ம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன.

19 ம் திகதி முதல் இரண்டாம் தவணைக்கான விடுமுறை முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்குவதாகவே கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதும் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாவதை முன்னிட்டு கல்வி அமைச்சிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை கருத்திற் கொண்டு இன்று 18ம் திகதி முதல் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்று 18ம் திகதிக்காக பாடசாலை ஆரம்பமானதன் பின்னர் பிரத்தியேக சனிக்கிழமை தினம் ஒன்றில் பாடசாலை நடத்துமாறும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.