செய்திகள்

ஐ. நா .விசாரணை ஒத்திவைப்புக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

காணாமற்போனோர் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை குறித்த போர்க்குற்ற விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கக் கோரியும் யாழ். நகரில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.

காணாமற்போனோர் தொடர்பிலான மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“காணாமல்போக தமிழர்க ள் என்ன ஜடப்பொருளா”, “சர்வதேசமே சத்தியத்தை நிலைநாட்டு”, “நீதிதேவனே கண் களை திற” என்றவாறான கோஷங்களை பதாகைகளாக எழுதிக்கொண்டும், உள்ளக விசாரணை வேண்டாம், குற்றவாளிகளே நீதிபதிகளா? என்ற கோஷங்களை எழுப்பிக் கொண்டும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தன்னுடைய மகன் காணாமல்போன சம்பவம் தொடர்பில் தாய் ஒருவர் கண்ணீர்மல்க கூறுகையில் என்னுடைய பிள்ளையை முல்லைத்தீவில் இறுதி யுத்தத்தம் நிறைவடைந்தபோது காலில் சிறு
காயத்துடன் படையினரிடம் ஒப்படைத்தேன். என்னுடைய பிள்ளையை படையினர் கொ ண்டு சென்றனர். என்னுடைய பிள்ளையை அதன் பின்னர் காணவில்லை. என்னுடைய பிள்ளை எங்கே? ஐ.நா விசாரணை மூலம் என்னுடைய பிள்ளையை கண்டுபிடிப்பார்கள் என்று நினைத்திருந்தேன். என்னுடைய பிள்ளையை கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று கதறினார்.

எங்களுக்கு உள்நாட்டில் விசாரணை வேண்டாம். இங்கே குற்றவாளிகளிடமே நாங்கள் நீதி கேட்க முடியுமா? அவர்கள் எமக்கு நீதி கொடுக்கமாட்டார்கள். எமக்கு நீதி வேண் டும். என்னுடைய பிள்ளை வேண்டும். நாங்கள் ஒழுங்காக சமைத்துச் சாப்பிடுவதில்லை. எங்கள் பிள்ளைகளை நினைத்து தினமும் அழுது கொண்டே இருக்கிறோம். என்னைப்போல் எத்தனை தாய்மார்? எத்தனை மனைவிமார்? எத்தனை பெற்றோர்? ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எங்கள் பிள்ளைகள் உயிரோடு இருக்கிறார்கள். அ வர்களை தேடிக்கொடுக்க ஐ.நாவே மார்ச் மாதத்தில் அறிக்கையை வெளியிடு எங்களா ல் இனியும் பொறுத்திருக்க முடியாது. எங்கள் பிள்ளைகளை தேடிக் கொடுங்கள் என்று ஆர்ப்பாட்டக் காரர்கள் கோரினர்.

மற்றொரு தாய் த னது காணாமல்போன தனது கணவன் பற்றிக் கூறுகையில் இறுதி யுத்தம் நிறைவடைந் த பின்னர் என்னுடைய கணவரை படையினரிடம் ஒப்படைத்தோம்.கணவனை ஒப்படைத்த இடத்திலிருந்து எங்களை விலகிப்போகச் சொன்னார்கள். பின்ன ர் நாங்கள் விலகிச் செல்லாமல் நின்றபோது எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி னார்கள். அதற்குப் பின்னர் நாங்கள் விலகிச் சென்றபோது என்னுடைய கணவன் உ ள்ளிட்ட பலரை பேருந்து ஒன்றில் ஏற்றிக்கொண்டு சென்றார்கள். என்னுடைய கணவன் பேருந்தில் இருந்து எங்களை பார்த்து சைகையினால் கிட்ட வர வேண்டாம் என கூறினார். அன்று தொடக்கம் என்னுடைய கணவனை நான் தேடிக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய கணவன் எங்கே? எல்லா முகாம்களிலும் எல்லா சிi றச்சாலைகளிலும் எனது கணவனை தேடிவிட்டேன் என்னுடைய கணவனை காணவில்லை. அவர் எங்கே என தேடிக்கொடுங்கள் என அவர் கண்ணீர் சிந்திக் கோரிக்கை விடுத்தார்.

போராட்டகாரர்கள் பேரணியாகச் சென்று யாழ். நல்லூர் வீதியில் அமைந்துள்ள யு.என்.எச்.சி.ஆர் அலுவலகத்தில் மனு ஒன்றையும் கையளித்தனர். இந்தப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி.பாஸ்கரா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

IMG_1881 IMG_2057 IMG_2062 IMG_2115 IMG_2138 IMG_2140 IMG_2158