செய்திகள்

இன்று 1400 கைதிகளுக்கு விடுதலை

வெசாக் போயா தினத்தையொட்டி சிறைச்சாலைகளிலிருந்து இன்று 1400 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இதன்படி நாடெங்கிலுமுள்ள சகல சிறைச்சாலைகளிலிருந்தும் கைதிகள் விடுதலைசெய்யப்படுவர் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறியளவிலான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாது தண்டனை அனுபவிப்பவர்கள் போன்றோரே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளததாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.