செய்திகள்

இம்முறையாவது சாதிக்குமா தென்னாபிரிக்கா?

1992 இல் தென்னாபிரிக்கா உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடிய வேளை அவர்கள் அது வரை மூன்று ஓரு நாள் போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்தனர். கடந்த 23 வருடங்களில் அவர்கள் உலகின் அனைத்து அணிகளையும் தோற்கடித்துள்ளனர், சொந்த மண்ணிலும் அதற்கு வெளியேயும்,ஓரு நாள் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்க கூடிய மிகச்சிறந்த வீரர்கள் அங்கிருந்து உருவாகியுள்ளனர். ஆனால் இதுவரை அவர்கள் கரங்களுக்கு கிட்டாதது உலககிண்ணம் மாத்திரமே.

2011 உலகிண்ணத்திற்கு பின்னர் அணியின் வளர்ச்சி மிக உயரத்திற்கு சென்றுள்ளது.ஸ் ஜக்கலிஸ், ஸமித், பவுச்சர் போன்றவர்களின் ஓய்வு சிறிய பாதிப்பை ஏற்படுத்திய போதிலும் அணி மீண்டும் பலம்பெற்றுள்ளது. அணித்தலைவர் டிவில்லியர்சும், பயிற்றுவிப்பாளர் ரசல் டொமின்கோவும் இணைந்து மிக திறமையான அணியொன்றை உருவாக்கியுள்ளனர்.

சாதகமான விடயம்
முதல் ஆறு துடுப்பாட்ட வீரர்களும் மிகத்திறமையானவர்கள், இது தவிர வேகமும் பந்தை ஸ்விங் செய்ய கூடிய திறனும் கொண்ட வேகப்பந்துவீச்சாளர்களும் அணியிலுள்ளனர்.இது தவிர திறமைவாய்நத சுழற்பந்துவீச்சாளர் ஒருவரும் அணியில் இடம்பிடித்துள்ளார். அணி ஓரிருவரில் தங்கியிருந்த நிலை மாறி தற்போது அனைவரும் பொறுப்புகளை பகிர்ந்துகொள்கின்றனர்.

முக்கிய வீரர்கள்
டேல் ஸ்டெயின்
உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் என பரவலாக பலரால் கருதப்படும் ஒருவர், அனேகமான தருணங்களில் தென்னாபிரிக்க அணிக்கும் ஏனைய அணிகளுக்கும் இடையிலான வித்தியாசமே இவராகத்தான் காணப்படும்,வேகமும், ஸ்விங்கும் எதிரணியினரை நடுங்கவைப்பவை, தனக்கு சாதகமான ஆடுகளத்தில் எதிரணியை இலகுவாக சாய்த்துவிடுவார்.

Dale-Steyn

ஏபி.டிவிலியர்ஸ்

இவரின் துடுப்பு பலவித வடிவங்களை எடுக்கும். சகலவிதமான ஸ்ரோக்குகளையும் ஆடக்கூடியவர். கடந்த ஐந்து வருடங்களாக ஓரு நாள்போட்டிகளுக்கான சிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் முதலாவதாக உள்ள வீரர் இவர்.  சில வாரங்களுக்கு முன்னர் பாக்கிஸ்தானிற்கு எதிராக 31 பந்துகளில் சதம் பெற்றார்.

149-Runs-44-Balls-2015

இம்ரான் தாஹிர்

தென்னாபிரிக்க அணி ஓருபோதும் சுழற்பந்துவீச்சாளர்களை நம்பியிருந்ததில்லை.எனினும் இவர் நம்பகத்தன்மை மிக்க ஓரு நாள் போட்டி பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.விக்கெட்களை வீழ்த்துவது ஓட்டங்களை கட்டுப்படுத்துலது என்ற இரண்டையும் சிறப்பாக செய்கிறார்.  2014 அதிகூடிய ஓரு நாள் விக்கெட்களை கைப்பற்றிய தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களில் ஒருவர். சுழற்பந்துவீச்சிற்கு சாதகமற்ற களங்களிலும் சிறப்பாக செயற்படும் இவர் வேகப்பந்து வீச்சாளர்களை மாத்திரம் கொண்டது தென்னாபிரிக்கா என்ற நிலையை மாற்றியுள்ளார்.

Imran+Tahir

எதிர்பார்ப்பு
முதல்சுற்றை இலகுவாக கடந்துசெல்வார்கள். முன்னாள் வீரர்களும், இரசிகர்களும் இந்த அணி இம்முறை வெல்லும் என்கின்றனர். ஆனால் முன்னைய உலககிண்ண போட்டிகளின் போதும் அவர்கள் இதனையே தெரிவித்தார்கள்.