செய்திகள்

இயக்குனராக அவதாரமெடுக்கும் பிரபல சண்டைப் பயிற்சியாளர்

உலகநாயகன் கமலுடன் ‘வேட்டையாடு விளையாடு’  இளையதளபதியுடன் ‘காவலன்’, சூர்யாவுடன் ‘கஜினி’ என அனைத்து முன்னணி  நடிகர்களுடனும்  சண்டைப்  பயிற்சியாளராகப்  பணியாற்றிவர்  “ஸ்டன்ட்”  சிவா. இவர் இப்போது புதிதாக இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

‘7 ஸ்டார் யூனிவர்சல் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடட்’ சார்பாக லேனி ஹவ் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் கெவின், ஸ்டிவின், லேனி ஹவ், ரோஹினி, ஜுனியர் பாலையா, நந்தா பெரியசாமி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

லேனி ஹவ் எழுதிய கதைக்கு, திரைக்கதை எழுதி இயக்குகிறார் “ஸ்டன்ட்” சிவா.  படம் சம்பந்தமாக சிவா மேலும் கூறுகையில் ‘இந்தப் படத்தின் நாயகன் எங்களில் ஒருவனாக இருப்பான். உங்களை அப்படியே நேரில் திரையில் பார்ப்பதுபோல இருக்கும். படம் ஜாலி கேலியாக, இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்றவகையில் இருக்கும் என்றார்.